Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கன்னியாகுமரியில் 400 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்..!

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசி, மண்ணெணெய் போன்றவைகள் தினந்தோறும் கடத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து உணவு கடத்தல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்களும் தினமும் வருகின்றன. அவர்கள் பறக்கும் படை அமைத்து மாவட்டம் முழுவதும் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து ரேஷன் அரிசியை, பால் வண்டி, மீன் கூடைகள், ஆம்புலன்ஸ், காய்கறி வண்டிகள், பஸ் மற்றும் பயணிகள் ஆட்டோவின் மூலம் கேரளாவுக்கு கடத்திச் செல்கின்றனர். இவற்றைத் தடுப்பதற்கு பல சோதனைச் சாவடிகள் மாநில எல்லைப் பகுதிகளில் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அதையும் மீறி கடத்தல்காரர்கள் உணவுப் பொருள்களை கடத்திச் சென்று விடுகின்றனர்.

நித்திரை விளை அருகே தூத்தூர் சின்னத்துரை பகுதியில் கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியர் ராஜசேகர், துணை வட்டாட்சியர் சந்திரசேகர், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணன் ஆகியோர் உணவுப் பொருள் கடத்தல் தடுப்புச் சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஒருவர் கோணி மூட்டைகளுடன் பைக்கில் வந்தார். அதிகாரிகளைப் பார்த்த உடன் பைக்கை விட்டுவிட்டு அவர் ஓடிவிட்டார். அதிகாரிகள் மூட்டைகளை சோதித்தபோது அதில் 100 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதுபோல் சின்னத்துறை  உப்பு மடம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ ரேஷன் அரிசியையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து காப்புக்காடு குடோனில் ஒப்படைத்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement