Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'முதலமைச்சரிடம்தான் கோப்புகள் தேங்குகின்றன' -கிரண்பேடி காட்டம்

”ஆளுநர் அலுவலகத்தில் எந்தக் கோப்பும் இல்லை. முதல்வர் மற்றும் தலைமைச் செயலர் அலுவலகத்தில்தான் கோப்புகள் தேங்கிக் கிடக்கின்றன” என்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி குற்றம் சுமத்தியிருக்கிறார்.

கிரண்பேடி

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும் இடையேயான அதிகார மோதல் தீவிரமடைந்து வருகிறது. அதன் உச்சகட்டமாக ”ஆளுநர்-முதல்வர் பிரச்சனையால் அரசு அதிகாரிகள் பணி செய்வதில் சுனக்கம் நிலவி வருகிறது. அதனால் இந்த விவகாரத்தில் மத்திய அரசு உடனே தலையிட்டு தீர்வு காண வேண்டும்” என்று புதுச்சேரியின் தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா தெரிவித்திருந்தார். மாநிலத்தின் தலைமைச் செயலாளரே இப்படி பேசியது புதுச்சேரி அரசியலில் அனலைக் கிளப்பியது.

அதைத் தொடர்ந்து “ஆளுநர்-முதல்வர் பிரச்சனையால் அரசு அதிகாரிகள் பணி செய்வதில் குழப்பம் நிலவுகிறது என்று தலைமைச் செயலாளரே கூறியிருப்பது துரதிஷ்டவசமானது. இந்த நிலை நீடித்தால் புதுச்சேரியின் எதிர்கால வளர்ச்சியும், மக்களின் நல்வாழ்வும் கேள்விக்குறியாகிவிடும். இந்நிலை மாற வேண்டுமென்றால் ஆளுநரும் ஆட்சியாளர்களும் இணைந்து செயல்பட வேண்டும்” என்று என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் எம்.பி.ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இது குறித்து வாட்ஸ்-அப்பில் கருத்து தெரிவித்த கிரண்பேடி, “மீண்டும் மீண்டும் நான் ஒரேயொரு வேண்டுகோளை வைக்கின்றேன். என்னிடம் அதிகார மோதல் ஏதும் இல்லை. தற்போது டெங்கு காய்ச்சலுக்கு எதிராக அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவதைப்போல, மாநில வளர்ச்சியிலும் அனைத்துத் துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குறைவான மனித வளம் அல்லது நிதியை பயன்படுத்தி அவசரகால தேவையை முன்னுரிமை அளித்து வெளிப்படையான முறையில் தீர்வு காண வேண்டும். நிதியை நியாயமான முறையில் செலவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

கிரண்பேடி

அதேபோல சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ”ஆளுநர்  கிரண்பேடிக்கு கோப்புகளில் கையொப்பம் இட நேரமில்லை” என்று குற்றம் சாட்டியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக சில கோப்புகளின் நகல்களை தேதி வாரியாக வாட்ஸ்-அப்பில் வெளியிட்ட கிரண்பேடி, ”ஆளுநர் அலுவலகத்தில் எந்த கோப்பும் இல்லை. மாறாக முதல்வர் மற்றும் தலைமை செயலர் அலுவலகத்தில்தான் கோப்புகள் தேங்கி கிடக்கின்றன. அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது தொடர்பான கோப்புகள் ஒரு வருட காலமாக  அவர்களிடம்தான் தங்கியிருந்தது. அது சோகமானது. ஆனால் அதிகாரிகள் ஆளுநர் மாளிகையில் இருந்ததாக  நினைத்திருந்தனர். ஆளுநர் அலுவலகம் மீது மீண்டும் மீண்டும் குற்றச்சாட்டு கூறுவதால் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த நிர்பந்திக்கப்பட்டுள்ளேன். கோப்புகளில் உள்ள தேதிகளை கவனமாகப் பாருங்கள். முதல்வர் சில மாதமும், தலைமைச் செயலர் 9 மாதங்களும் கோப்புகளை வைத்துள்ளனர். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. பொதுமக்கள் பார்ப்பதற்கு உரிமை உண்டு. எனவே அவர்களுக்கு கோப்புகளின் தேதிகளை காட்டுங்கள்” என்று கூறி அதிரடியைக் கிளப்பியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement