கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

கன்னியாகுமரி ரயில் நிலைய சந்திப்பில் அமைந்துள்ளது, ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த குகநாதீஸ்வரர் கோயில். தஞ்சை பெரிய கோயிலைக்  கட்டுவதற்கு முன்பாகவே  சோழப் பேரரசன் ராஜராஜ சோழன்  இந்தக் கோயிலைக் கட்டியுள்ளார். இங்கு, குகன் என்ற முருகக்கடவுள், ஈஸ்வரன் என்ற சிவனை வழிபட்டதால், இந்தக் கோயிலுக்கு குகநாதீஸ்வரர் கோயில் என்று பெயர்க் காரணம் கூறுகின்றனர். இந்தக் கோயிலின் மூலஸ்தானத்தில் அமைந்துள்ள சிவலிங்கம், குமரி மாவட்டத்திலேயே மிகப் பெரிய சிலையாகும். இதன் உயரம்  5 அடிகள். குகநாதீஸ்வரர் கோயிலில், ஆண்டுதோறும் புரட்டாசி திருவாதிரை நட்சத்திரத்தில் 1008 சங்காபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

அதேபோல, இந்த ஆண்டும் புரட்டாசி திருவாதிரை  நட்சத்திரத்தை முன்னிட்டு இந்தக் கோயிலில் 1008 சங்காபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி, காலை 6 மணிக்கு கணபதி ஹோமமும்  7 மணிக்கு கோமாதா பூஜையும் 9 மணிக்கு சங்கு பூஜையும் ,10.30-க்கு 1008 சங்காபிஷேகமும் நடந்தது. அதன்பிறகு, வாகன பவனியும், பக்தர்களுக்கு  அன்னதானமும் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோயில் பக்தர்கள்  பேரவையினர் செய்திருந்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!