காரைக்குடி பகுதியில் தொடர் திருட்டு! அச்சத்தில் பொதுமக்கள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே விராமதி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி சுப்பையாவின் மகன் கோவிந்தராஜ் (49).  இவர், நேற்று மதியம் வீட்டை பூட்டிவிட்டு ,தனது மனைவி சரஸ்வதியுடன் வயலுக்குச் சென்றுள்ளார். மாலையில் வீட்டுக்குத் திரும்பியபோது, கதவு திறந்துகிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். பீரோவில் இருந்த 60 பவுன் தங்க நகைகளைக் காணவில்லை. இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீஸார் விசாரணை நடத்தினர். சிவகங்கையிலிருந்து மோப்பநாய் லைக்கா வரவழைக்கப்பட்டது.

 அதேபோல, தேவகோட்டை ரஸ்தா காதி நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவர், போக்குவரத்துக் கழக ஓய்வுபெற்ற கண்காணிப்பாளர்.  நேற்று மதியம், தீபாவளிக்கு பொருள்கள்  வாங்க  குடும்பத்துடன்  காரைக்குடிக்குச் சென்றுள்ளார். மதியம் 3 மணிக்கு வீட்டுக்குள் வந்து பார்த்தபோது, 11 பவுன் தங்க நகைகள், ரூ. 50 ஆயிரம் ரொக்கம், எல்இடி ஆகியவை திருடுபோனது தெரிந்தது. காரில் வந்த மர்ம நபர்கள் திருடியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து சோமநாதபுரம் போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி,தேவகோட்டை பகுதிகளில் சாதாரணமாகவே திருட்டு தொடர்ந்துகொண்டிருக்கிறது. தீபாவளிக்கு நாள்கள் நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையில், தொடர் திருட்டு நடந்துகொண்டிருப்பது, பொதுமக்களிடையே அச்சத்தை உண்டாக்குகிறது.திருட்டைக் கட்டுப்படுத்த போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுப்பதாகத் தெரியவில்லை. திருடர்களோடு போலீஸாருக்கு கூட்டணி இருக்கலாம் என்றும் அங்குள்ளவர்கள் சந்தேகிக்கிறார்கள்.  இவர்களை போலீஸ் உயர் அதிகாரிகள் கண்டுபிடித்தால், திருட்டு குறையும் என்கிறார்கள் பொதுமக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!