Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரை ஆரம்ப சுகாதார நிலையங்களில் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு டெங்கு பாதிப்பால் நோயாளிகள் அதிக அளவில் வந்துகொண்டிருக்கும் நிலையில், மாவட்டத்திலுள்ள பிற அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளத் தேவையான பரிசோதனை உபகரணங்களை மாவட்ட நிர்வாகம் வழங்கிவருகிறது.

வீரராகவராவ்

ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையை (Platelets count)க் கண்டறியும் கருவிகளை கலெக்டர் வீரராகவராவ்  வழங்கினார். பின்னர் அவர் பேசியபோது, ''மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்குவை  ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக,  ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு ரத்த அணுக்களின் எண்ணிக்கையைக் கண்டறியும் 22 கருவிகள்,  பொது சுகாதாரத்துறை மூலம்  வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 20 விதமான ரத்தப் பரிசோதனைகள் மேற்கொள்ளலாம். 55 விநாடிகளில் ரத்தப் பரிசோதனை முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம். மேலும், ஒருமணி நேரத்தில் 60 நபர்களுக்கு ரத்தப் பரிசோதனையை மேற்கொள்ள முடியும். தனியார் மருத்துவமனைகளில், இந்தப் பரிசோதனைக்காக 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இப்பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.

 பொதுமக்கள், டெங்குகுறித்த வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.  காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தால், உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்று ரத்தப் பரிசோதனை செய்து,  டெங்கு காய்ச்சலா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பின்னர், அதற்கேற்றவாறு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்கான அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement