Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

400 தொண்டர்களுக்கு ஆண்மையிழப்பு சிகிச்சை- குர்மீத்துக்கு சி.பி.ஐ கிடுக்கிப்பிடி!

தேரா சச்சா அமைப்பைச் சேர்ந்த 400 பேர், ஆண்மையிழப்பு அறுவைசிகிச்சை செய்துகொண்ட வழக்கில், சி.பி.ஐ குர்மீத்திடம் நேற்று வாக்குமூலம் பெற்றது.

சாமியார் குர்மீத்

பாலியல் பலாத்கார வழக்கில் 20 ஆண்டுகள் தண்டனைபெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள குர்மீத்  ராம்ரஹீம் மீது, 2014-ம் ஆண்டு ஹன்ஸ்ராஜ் சௌகான் என்பவர் ஒரு புகார் அளித்தார். அதில், 'ஷிர்ஷாவில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருக்கும் தேரா சச்சா அமைப்பைச் சேர்ந்த 400 தொண்டர்களுக்கு, ஆண்மையிழப்பு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில், பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. தேரா சச்சா தொண்டர்களுக்கு ஆண்மையிழப்பு அறுவைசிகிச்சை செய்த இரண்டு டாக்டர்களைக் கைதுசெய்த சி.பி.ஐ அதிகாரிகள், அவர்களிடத்தில் ஏற்கெனவே வாக்குமூலம் பெற்றிருந்தனர். தொடர்ந்து, முக்கியக் குற்றவாளியான குர்மீத்திடம் நேற்று ரோக்டக் சிறையில் வாக்குமூலம் பெற்றனர். 

குர்மீத் மீது புகார் அளித்த ஹன்ஸ்ராஜ், 15 வருடங்கள் தேரா சச்சா அமைப்பில் இருந்தவர். 2009-ம் ஆண்டு, அதிலிருந்து விலகினார். இது குறித்து ஹன்ஸ்ராஜ் கூறுகையில்,'' தேரா சச்சா ஆசிரமத்தில் 2001-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாதமும் சில தொண்டர்களைத் தேர்ந்தெடுத்து, ஆண்மையிழப்பு அறுவைசிகிச்சை செய்யப்பட்டுவந்தது. இது மிகப் பெரிய அறுவைசிகிச்சை. வலி தரக்கூடியது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 45 நாள்கள் வரை ஓய்வெடுக்க வேண்டும். இந்த அறுவைசிகிச்சை செய்துகொண்டால், கடவுள் நம்மை விரும்புவார். அவரிடம் எளிதில்  நெருங்கிவிடலாம் என தேரா சச்சாத் தொண்டர்களிடம் குர்மீத் கூறுவார்'' எனத் தெரிவித்துள்ளார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement