Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

காதலன் கண்முன்னே பெண் பலாத்காரம்! - சென்னையை அதிரவைத்த சம்பவம்

காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் அருகே உள்ள நெடுமரம் என்கிற இடத்தில், 20 வயது பெண், காதலன் முன்பே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார். நான்கு பேர் கொண்ட கும்பல், கத்தியைக் காட்டி மிரட்டி, இளம்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

women

 

சென்னையிலிருந்து சுமார் 80 கி.மீ தொலைவில் உள்ள கூவத்தூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில், இந்த இளம்பெண் வேலைபார்த்து வந்தார். இவர் வேலை முடித்துவிட்டு நெடுமரத்தில் தனது காதலனைச் சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை வேலையை முடித்துவிட்டு அவரின் காதலனோடு சென்றிருக்கிறார். குடிபோதையில் இருந்த நான்கு பேர் அவர்களைப் பின் தொடந்துள்ளனர். அவர்கள் ஓரிடத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, அந்த இளம்பெண்ணின் காதலனை நான்கு பேரும் அடித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, காதலன் கண்முன்னே அந்தப் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண், நான்கு பேரால் பலாத்காரம் செய்யப்பட்டதை நண்பரிடம் தெரிவித்துள்ளார். அந்த நண்பர் கொடுத்த புகாரின் பேரில், காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணை செங்கல்பட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். முதல்கட்ட விசாரணையில், சந்தேகப்படும்படியான நபர்கள் வேகமாகத் தங்களது வண்டியில் சென்றதை சிலர் கவனித்துள்ளனர். அவர்கள் கொடுத்த அடையாளங்களை வைத்து குற்றவாளிகளைத் தேடுவதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.

காதலன் கண்முன்னே காதலி பலாத்காரம் செய்யப்பட்டது, அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement