திரையரங்குகளுக்கு புதிய விதிகளைப் பிறப்பித்த நடிகர் விஷால்!

தமிழகத்தில், சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவிகித ஜி.எஸ்.டி வரியுடன் 30 சதவிகித கேளிக்கை வரியும் விதிக்கப்பட்டது. இந்நிலையில் அரசு, கடந்த 27-ம் தேதி முதல் புதிய கேளிக்கை வரியில் திருத்தம்செய்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில், திரைப்படங்களுக்கான புதிய உத்தரவுப்படி, கேளிக்கை வரி 30 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

விஷால்


இருப்பினும், தற்போது போடப்பட்டிருக்கும் புதிய வரி விதிப்பால் தியேட்டர்களில் டிக்கெட் விலை ஏறக்கூடும் என்று கூறப்படுகிறது.  இதற்கிடையில், நடிகர் விஷால் தற்போது திரையரங்குகளில் புதிய விதிகளைப் பின்பற்றும்படி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 


நாளை முதல் அரசு நிர்ணயம்செய்த கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்க வேண்டுமென்றும்,  கேன்டீன்களில் எம்.ஆர்.பி விலைக்குதான் பொருள்களை விற்க வேண்டும். அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்பட வேண்டும். தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும். திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது. விரைவில் ஆன்லைன் கட்டணமும் ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், எப்போது இந்த விதிகள் திரையரங்குகளில் கடைபிடிக்கப்படும் என்று தெரியவில்லை. 


சில நாள்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் விஷால்,  மற்ற மாநிலங்களில் வெறும் ஜி.எஸ்.டி வரி மட்டும் இருக்கும் நிலையில், இங்கு மட்டும் கூடுதல் வரி இருப்பதற்கான காரணம் என்ன' என்று மாநில அரசை நோக்கி அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது குறிப்பிடத்தக்கது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!