’டெங்கு குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை!’ - மத்திய ஆய்வுக் குழு 

டெங்கு பாதிப்புகுறித்து ஆய்வுசெய்ய மத்தியக் குழு தமிழகம் வந்துள்ள நிலையில், டெங்கு ஒழிப்புப் பணிக்கு ரூ.256 கோடி தேவைப்படுவதாக மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. 

டெங்கு
 

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலின் தாக்கம் தீவிரம் அமைந்துவருகிறது. டெங்கு காய்ச்சல் பரவுவதைத் தடுக்க, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துவருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய பின் செய்தியாளர்களைச் சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டெங்கு காய்ச்சலின் தாக்கம்குறித்து ஆய்வுசெய்ய மத்தியக் குழு தமிழகம் வருவதாகத் தெரிவித்தார். 

அதன்படி, ஐந்து மருத்துவர்களைக்கொண்ட வல்லுநர் குழு இன்று சென்னை வந்தது. மத்திய ஆய்வுக் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``தமிழகத்தில் டெங்கு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக ரூ.256 கோடி கூடுதல் நிதியாக ஒதுக்க வேண்டும் என மத்தியக் குழுவிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அந்தத் தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்கும் என்று நம்புகிறேன். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மத்தியக் குழு ஆய்வுசெய்யும்’' என்றார்.

அமைச்சரைத் தொடர்ந்து, மத்திய மருத்துவக்குழு உறுப்பினர் அசுதோஷ் பிஸ்வால், `டெங்கு காய்ச்சல்குறித்து மக்கள் அச்சப்படத் தேவையில்லை. கொசுக்களை ஒழிப்பதே டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குத் தீர்வு. டெங்கு காய்ச்சலிருந்து தப்பிக்க நமது பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்’ என்று தெரிவித்தார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!