Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியருக்குப் பளார்! : பதற்றத்தில் தனியார் மருத்துவமனை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனை செவிலியர்கள் சம்பள உயர்வு கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று மூன்றாவது நாளாக எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மருத்துவமனை செவிலியர்களின் போராட்டம் தொடர்ந்தது. அப்போது அங்கிருந்த செக்யூரிட்டிகளுக்கும் நர்ஸ்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட சத்யா என்ற பெண் செவிலியர் தாக்கப்பட்டுள்ளார். அதுபோல் ஆண் செவிலியர் ஒருவரும் தாக்கப்பட்டுள்ளார். இதனால் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் ஊழியர்களிடம் எஸ்.ஆர்.எம் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஹாஸ்டலில் தங்கி இருக்கும் செவிலியர்களை உடனடியாக வெளியேற சொல்லி மருத்துவமனை நிர்வாகம் நோட்டீஸ் ஒட்டியிருக்கிறது. இதில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் காலை முதல் பரபரப்பு நிலவுகிறது.

எஸ்.ஆர்.எம்.

போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களோ, “2016 உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் செவிலியர்களுக்கு சம்பளத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டும். சம்பளத்தை உயர்த்திக்கேட்டு அமைதியான முறையில் போராடி வருகிறோம். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் அராஜக முறையில் பணியாளர்களை அடிப்பதும் விரட்டுவதுமாக இருக்கிறது. எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும்” என்கிறார்கள்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement