Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நிலவேம்பு கஷாயம் வழங்கிய சுதீஷ்மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

சுதீஷ்

நிலவேம்பு கஷாயம் வழங்கிய சுதீஷ் உள்ளிட்டோர்மீது திருச்சியில் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, தே.மு.தி.கவினர் நேரில் சென்று உதவிகள் செய்ய வேண்டும்'' என அக்கட்சியின் பொதுச் செயலாளர் விஜயகாந்த் அறிவித்திருந்தார். அந்தவகையில் தே.மு.தி.க-வின் மாநில துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் நேற்று புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நேற்று மதியம், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் அப்பகுதியின் முன்னாள் கவுன்சிலர் ராஜ்குமார் என்பவரின் உருவப்படத்தைத் திறந்து வைத்த எல்.கே.சுதீஷ், அடுத்து திருச்சி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறி, நோயாளிகளுக்குப் போர்வை வழங்கினார். அடுத்து, திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இதேபோன்று நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். பிறகு, மார்க்கெட் பகுதியில் கிடந்த கழிவுகளைச் சுத்தப்படுத்தினார் சுதீஷ்.

அப்போது சுதீஷ், “கடந்த 10 நாள்களாக அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று டெங்கு பாதிப்பு குறித்து மக்களைச் சந்தித்து வருகிறோம். குறிப்பாக திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். இந்த இரண்டு மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகமாகவே உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இருந்தும், அங்கு டெங்கு பாதிப்பு மிக மோசமாக உள்ளது. திருச்சி மாநகராட்சியைப் பொறுத்தவரை 65 வார்டுகளிலும் குப்பைகள் அள்ளப்படாமல் கிடக்கிறது. ஆங்காங்கே மழைநீர் தேங்கிக் கிடப்பதால் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவுகிறது என்றும், புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது. ஆனால், அதற்கான பேனர்களில் ஜெயலலிதா படம் இல்லை. இவர்கள் ஜெயலலிதாவையே மறந்துவிட்டார்கள். இந்த அரசு ராஜினாமா செய்ய வேண்டும். தமிழகத்தில் மீண்டும் தேர்தல் வந்தால் அ.தி.மு.க டெபாசிட் இழக்கும்'' எனக் காட்டமாகப் பேசிவிட்டுச் சென்றார்.

திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் எந்தவிதி முன்னறிவிப்புமின்றி இலவச நிலவேம்பு கஷாயம் கொடுக்கும் நிகழ்ச்சியில் சுதீஷ் கலந்து கொண்டார் என்றும், திடீரென நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியால், அங்கு மக்கள் திரண்டதால், கூட்டம் அலைமோதியது. இதனால் 1 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று, திருச்சி காந்தி மார்கெட் காவல்நிலையத்தில் சுதீஸ் மற்றும் திருச்சி மாநகர மாவட்டச் செயலாளர் கணேஷ் உள்ளிட்ட மூவர் மீது, பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாகக் கூடியது; சட்டத்திற்குப் புறம்பாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட 4பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தே.மு.தி.க துணைச்செயலாளர் சுதீஷ் மீது போடப்பட்டுள்ள இந்த வழக்கு பெரும் பரபரப்பை உருவாக்கி உள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement