Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மதுரையில் களத்தில் இறங்கியது டெங்கு கண்காணிப்புக் குழு!

தமிழகம் முழுதும் டெங்கு காய்ச்சலால் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதைத் தடுப்பதற்கு அரசு தரப்பிலும் பல ஏற்பாடுகள் எடுக்கப்பட்டாலும், அது பரவலான மக்களுக்குப் போய்ச் சேரவில்லை. டெங்குவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை அரசு குறைத்துச் சொல்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில் டெங்குவைக் கண்காணிக்க செயலாளர் அந்தஸ்திலுள்ள அதிகாரிகள் தமிழகம் முழுக்க ஆய்வு நடத்த தொடங்கியுள்ளனர்.

டெங்கு


இன்று மதுரைக்கு வருகை தந்த வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் தர்மேந்திர பிரதாப் யாதவ், கலெக்டர் வீரராகவராவ், மாநகராட்சி கமிஷனர் அனீஷ் சேகர் ஆகியோர் பல பகுதிகளில் ஆய்வு நடத்தினார்கள். கோ.புதூர், மாரியம்மன் கோயில் தெரு, மாட்டுத்தாவணி என டெங்கு கொசு உற்பத்தியாக வாய்ப்புள்ள இடங்களில் தீவிரமாக ஆய்வு நடத்தினார்கள். அப்பகுதி பொதுமக்களிடமும் துப்புரவுப் பணியாளர்களிடம் விசாரணை செய்தார்கள். அதிகாரிகள் ஆய்வு நடத்த வருவது தெரிந்தும் பல இடங்களில் குப்பைகள் தேங்கியும் சாக்கடை வழிந்தோடியும் காணப்பட்டது. இவர்களின் ஆய்வோடு மாநகராட்சி அதிகாரிகள் தரும் ஆய்வறிக்கையையும் வைத்து மாவட்டத்திலுள்ள டெங்கு பாதிப்பின் தீவிரத்தையும் இதற்கான தீர்வையும் அறிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement