மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்த கடைப்பிடிக்கப்படும் 'நோ ப்ரா டே' இன்று! #nobraday

ப்ரா

மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒரு தனியார் அமைப்பு அக்டோபர் 13-ம் தேதியை 'நோ ப்ரா டே'-வாக அறிவித்தது. ஆண்டுக்கு 50,000-க்கும் அதிகமானோர் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படும் நாடான இங்கிலாந்தில் தொடங்கிய இந்த நிகழ்வு, 2011-ம் ஆண்டிலிருந்து சமூக வலைதளங்களின் கவனத்தைப் பெற்று தற்போது 40-க்கும் அதிகமான நாடுகளில் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வின்படி, 2020-ம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடத்துக்கும் 76,000 பெண்களைக் கொல்லும் கொடிய நோயாக மார்பகப் புற்றுநோய் மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருக்கின்றதாம்! 

எனவே, இந்த நாளில் மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் சோதனைகளைச் செய்யவும், மார்பகப் புற்றுநோயைக் குணப்படுத்த நடைமுறையில் இருக்கும் மருத்துவ வழிமுறைகள் குறித்தும், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுடைய கதைகள் போன்ற மார்பகப் புற்றுநோய் குறித்த பல்வேறு விழிப்பு உணர்வு நிகழ்வுகளையும் பல்வேறு நாடுகளிலும், தனியார் அமைப்புகள் நடத்தி வருகின்றன. பெண்களுக்கு மட்டுமல்லாமல், ஆண்களுக்கும் சேர்த்தே விழிப்பு உணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. #nobraday என்கிற ஹாஷ் டேகின் மூலம் சமூக வலைதளங்களிலும் இதுகுறித்த விழிப்பு உணர்வு செய்திகள், கதைகள் பகிரப்படுகின்றன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!