'அ.தி.மு.க ஆட்சி டெங்கு ஆட்சி என்றால் தி.மு.க., ஆட்சியை எயிட்ஸ் ஆட்சி என்பேன்’ அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காட்டம் | i will call DMK government as aids government, says tamilnadu minister

வெளியிடப்பட்ட நேரம்: 01:10 (14/10/2017)

கடைசி தொடர்பு:01:10 (14/10/2017)

'அ.தி.மு.க ஆட்சி டெங்கு ஆட்சி என்றால் தி.மு.க., ஆட்சியை எயிட்ஸ் ஆட்சி என்பேன்’ அமைச்சர் ஓ.எஸ்.மணியன் காட்டம்

‘’ அ.தி.மு.க ஆட்சியை ஸ்டாலின் டெங்கு ஆட்சி என்று சொல்லி வந்தால் தி.மு.க ஆட்சியை எய்ட்ஸ் ஆட்சி எனச் சொல்வேன்’’என தூத்துக்குடியில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில்  நவீனமயமாக்கப்பட்ட முத்துநகர் கோ-ஆப் டெக்ஸ் விற்பனை நிலையத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், ’’ தமிழகத்தில் டெங்குக் காய்ச்சலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை சார்பில் தீவிர பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்குவை ஏற்படுத்தும் கொசுக்கள் பெரும்பாலும் வீடுகளிலுள்ள குளிர்சாதனப் பெட்டிகளிலிருந்துதான் உருவாகிறது. எனவே, குளிர்ச்சாதன பெட்டிகளில் தேங்கியுள்ள தண்ணீரை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.  டெங்கு காய்ச்சலுக்காக காப்பீடு திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு சோதனைக்காக அரசு மருத்துவமனைகளில் சோதனை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், சிறப்பாக மக்கள் பணி செய்து வரும் அ.தி.மு.க ஆட்சியை ’டெங்கு ஆட்சி’ கூறி வருகிறார். இவ்வாறு அவர் தொடர்ந்து கூறி வந்தால், கடந்த தி.மு.க ஆட்சியை எயிட்ஸ் ஆட்சி என கூறுவேன்.  காரணம், கடந்த தி.மு.க ஆட்சியின் போது மஹாராஷ்டிராவில் இருந்து விலைமாதர்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து விபச்சாரத்தை ஊக்குவித்து வந்த காரணத்தினால்தான் தமிழகத்தில் எயிட்ஸ் நோய் அதிகம் பரவியது.

தற்போது மதுபானங்களின் விலையை அதிகரித்ததன் காரணமே தமிழகத்தில் பூரண மதுவிலக்கு ஏற்பட வேண்டும் என்பதால்தான். 500 கடைகளாக மூடுவதும் மதுபானங்களின் விலையை உயர்த்துவதும் சமமானதுதான்.’’ என்றார்.    

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close