’கோவையில் உடல்நலக் குறைவால் தோட்டத்தில் தஞ்சமடைந்த யானை’

கோவை கரடிமடை மலையடிவாரப் பகுதியில் உடல்நிலை சரியில்லாமல், யானை ஒன்று படுத்துள்ளது.

கோவை, மாதம்பட்டி அடுத்த கரடிமடை மலையடிவாரத்தில் இன்று அதிகாலை பெண் யானை ஒன்று உடல்நிலை சரியில்லாமல் படுத்திருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால், உடல்நிலை சரியில்லாமல் படுத்திருக்கும் யானை அருகில் 2 காட்டு யானைகள் இருந்தன. அதில் ஒன்று குட்டி யானை ஆகும். இதனால், வனத்துறையினரால், உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் யானைக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை.

 

இதைத் தொடர்ந்து, வனத்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு, பட்டாசுகள் வெடித்து காட்டு யானைகளை விரட்டும் முயற்சி நடந்தது. சில மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் வனத்துறையினர், காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதையடுத்து, உடல்நலம் குன்றிய யானைக்கு சிகிச்சை அளிக்கும் முயற்சிகளில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!