கின்னஸ் சாதனை நிகழ்த்திய பள்ளி மாணவர்கள்!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்திய தேசிய அறிவியல் மாநாட்டின் ஒரு பகுதியாக இன்று கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன் பங்கேற்றார்.

உலகின் மிகப்பெரிய உயிரியல் விரிவுரையைத் தொடர்ந்து நிகழ்த்தி கின்னஸ் சாதனையை மாணவர்கள் நிகழ்த்தியுள்ளனர். இந்த முயற்சியை கின்னஸ் சாதனையாக கின்னஸ் நிறுவனம் அங்கீகரித்துள்ளது. இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு டெல்லியில் நடத்தப்பட்ட இதே தேசிய அறிவியல் மாநாட்டில் வெறும் 550 மாணவர்கள் மட்டுமே கொண்டு செய்யப்பட்ட சாதனையை இன்றைய சாதனை முறியடித்துள்ளது.

1,050 பேர் கலந்துகொள்வதாக இருந்த இந்த மாநாட்டில் 1,049 மாணவர்கள் பங்கேற்று தங்களின் பங்களிப்பைத் தந்துள்ளனர். இந்த சாதனையில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் ஒன்பதாம், பத்தாம் வகுப்பு படித்து வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையைத் தொடர்ந்து டி.என்.ஏ குறித்த மாதிரி விளக்கமும் வழங்கப்பட்டது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!