அக்டோபர் 17-ம் தேதி தீபாவளி சிறப்பு ரயில் இயக்கம்! | Special train has been operate in October 17th

வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (14/10/2017)

கடைசி தொடர்பு:17:00 (14/10/2017)

அக்டோபர் 17-ம் தேதி தீபாவளி சிறப்பு ரயில் இயக்கம்!

தீபாவளியையொட்டி வரும் 17-ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. வரும் 17-ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

எழும்பூரில் இருந்து இந்த ரயில் காலை 7 மணிக்கு புறப்படும் என்றும் நெல்லைக்கு இரவு 11 மணிக்கு சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் நெல்லையிலிருந்து சென்னை எழும்பூருக்கு வரும் 20-ம் தேதி காலை 7.20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.