இணையமைச்சர் காலடி எடுத்து வைத்ததும் பவர் கட்! -  ராஜீவ் காந்தி மருத்துவமனையில் களேபரம்! | Power cut at Chennai Rajiv Gandhi hospital during State Minister visit 

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (15/10/2017)

கடைசி தொடர்பு:14:39 (15/10/2017)

இணையமைச்சர் காலடி எடுத்து வைத்ததும் பவர் கட்! -  ராஜீவ் காந்தி மருத்துவமனையில் களேபரம்!

’ஆறு மாதத்துக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று  மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினிகுமார் சவுபே தெரிவித்துள்ளார். 

rajiv gandhi
 

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அஸ்வினிகுமார் சவுபே இன்று ஆய்வு மேற்கொண்டார். மத்திய இணையமச்சருடன் பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அஸ்வினிகுமார் சவுபே  ’தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த மாநில அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் 6 மாதத்துக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார். மேலும் தமிழகத்தில் குழந்தைகள் இறப்பு விகிதம் கட்டுக்குள் உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

rajiv gandhi hospital
 

இதனிடையே மருத்துவமனைக்குள் ஒரு சின்ன களேபரம் நடந்தது. மத்திய இணையமைச்சர்  அஸ்வினிகுமார் சவுபே, தமிழிசை, விஜயபாஸ்கள் உள்ளிட்டோர் மருத்துவமனையில் இரண்டாவது தளத்தில் உள்ள வார்டை பார்வையிட்ட பின்னர் கீழே இறங்க லிஃப்ட் அருகே வந்தனர்.

rajiv gandhi
 

இணையமைச்சர் லிஃப்டுக்குள் காலெடி எடுத்துவைக்க, திடீரென்று பவர் கட் ஆகிவிட்டது. நல்லவேளை லிஃப்டின் கதவு மூடும் முன்னரே, லிஃப்ட் செயலிழந்து நின்றுவிட்டது. அதனால் லிஃப்டுக்குள் அமைச்சர் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்துவிட்டார். பின்னர் முதல் தளம் இறங்கி செல்லும்போது மீண்டும் கரன்ட் வந்தது. அனைவரும் தரைதளம் வந்திறங்கினர். ஆனாலும் அங்கு சிறிது நேரத்துக்கு பதற்றம் நிலவியது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க