நடிகர் விஜய் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!

நடிகர் விஜய் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, இயக்குநர் அட்லி ஆகியோர் உடன் இருப்பதாகத் தகவல் வெளியானது. மெர்சல் திரைப்படம் வெளியாவதில் ஏற்பட்ட சிக்கல் தொடர்பான சந்திப்பாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திரையரங்கக் கட்டண நிர்ணயம், கேளிக்கை வரி குறைப்பு உள்ளிட்டவற்றிக்காக நடிகர் விஜய், முதல்வரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தாராம். அண்மையில் திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் கேளிக்கை வரி 10 சதவிகிதத்திலிருந்து 8 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  

விஜய்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!