வெளியானது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ‘சொடக்கு’ பாடல் டீஸர்!

தானா சேர்ந்த கூட்டம்

சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அனிருத் இசையில் உருவாகிவரும் படம், ‘தானா சேர்ந்த கூட்டம்’. “நானும் ரௌடி தான்” படத்தின் வெற்றிக்குப் பின், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் படம் என்பதால், இந்தப் படத்தின்மீது நிறைய எதிர்பார்ப்புகள். அனிருத் இசையில் ஏற்கெனவே இந்தப் படத்தின் முதல் பாடலான ‘நானா தானா’ வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், மற்ற பாடல்களும் இதே வகையில் சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இசையமைப்பாளர் அனிருத்தின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் இரண்டாவது பாடலின் டீஸரை வெளியிட்டுள்ளனர். ‘சொடக்கு மேல சொடக்கு போடுது’ என்ற இந்தப் பாடலை ஆண்டனி தாசன் பாடியிருக்கிறார், மணி அமுதவன் மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளனர். இந்த ஒரு நிமிட டீஸரில் அனிருத், சமீபத்தில் வைரலான ஜிமிக்கி கம்மல் பெண்கள், தம்பி ராமையா, சூர்யா, விக்னேஷ் சிவன் உட்பட பலர் வருகிறார்கள்.

சூர்யா, கீர்த்தி சுரேஷ், நவரச நாயகன் கார்த்திக், நந்தா, செந்தில், ஆர்.ஜே.பாலாஜி, ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திரக் கூட்டமே நடித்திருக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ வரும் பொங்கலன்று திரைக்கு வருகிறது.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!