வெளியிடப்பட்ட நேரம்: 10:22 (16/10/2017)

கடைசி தொடர்பு:14:29 (16/10/2017)

தமிழகத்தில் இன்று அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு!

வடதமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பகுதிகளில், கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து மழை பெய்துவருகிறது. இந்நிலையில், மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

மழை

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான மேலடுக்குச் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, திண்டிவனம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில், நேற்று முன் தினம் கன மழை பெய்தது. இந்நிலையில்தான், இன்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக ,வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  'ஆந்திரப் பகுதியை ஒட்டியுள்ள வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன்கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது' என்று கூறியுள்ளது.