'யாரைத்தான் நம்புவது' என்கிறார் விஜயகாந்த்!

டெங்கு, விஜயகாந்த்

டெங்கு பாதிப்பு குறித்து விழிப்புஉணர்வு பிரசாரத்துக்காகத் தமிழகம் முழுவதும் வலம் வரத்தொடங்கிவிட்டார் விஜயகாந்த். திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் உள்ளவர்களைச் சந்தித்து உதவிப் பொருள்களை வழங்கி வருகிறார். போகும் இடங்களில் பொதுமக்களைச் சந்தித்து நிலவேம்பு கஷாயம் கொடுக்கிறார். அதைத்தொடர்ந்து இன்று செங்கல்பட்டு பகுதிக்கு வந்திருந்தார் விஜயகாந்த்.

டெங்கு, விஜயகாந்த்

 

புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயம் கொடுத்துவிட்டு, அரசு மருத்துவமனைக்கு வந்தவர் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்து, அவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

செங்கல்பட்டு பகுதியில் எவ்வளவு பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்?

ஒரு பத்து… இருபது பேர் இருக்கும்னு சொல்றாங்க. 100 பேருக்கு மேல காய்ச்சலுக்கு அட்மிட்டாகி இருக்கிறதா சொல்றாங்க.

டெங்குவுக்கு அரசு மருத்துவமனைகளில் எப்படிச் சிகிச்சை கொடுக்கிறார்கள்?

“அதான் நல்லா இருக்காம்… அதை மறைக்கறாங்க.”

டெங்கு காய்ச்சலால் யாரும் இதுவரை உயிரிழக்கவில்லை எனச் சில அமைச்சர்கள் சொல்கிறார்களே?

“அவங்க அப்படித்தான் சொல்வாங்க… டிவியை நம்புவதா… உங்களை நம்புவதா… மத்திய அரசை நம்புவதா… ஆளும் கட்சிக்காரங்க பொய்தான் சொல்வாங்க…”

பிரேமலதாவை அனுமதி மறுப்பு… சுதீஷ்மீது வழக்குப் பாய்ச்சல்… இவைகளுக்கு ஆளும் கட்சிதான் காரணமா?

“சுகாதாரத்துறை அமைச்சர் இப்படி செய்திருக்கலாம் என்று நினைக்கிறேன். அவரோட செயல்பாடுகள் நல்லாவே இல்லை. அவர்மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கிறது.”

டெங்கு நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் 250 கோடி தமிழக அரசு நிதி கேட்கிறதே?

“கொள்ளையடிப்பதுக்காகக் கேட்பார்கள்.”

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

“உள்ளாட்சித் தேர்தலில் நிற்போம். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில்தான் நிற்க மாட்டோம். என்னுடைய ஆதரவு இப்ப யாருக்குமே இல்லை. என்னை விட்டுடுங்க.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!