திறக்கப்பட்டது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்! | vedanthangal bird sanctuary opened today

வெளியிடப்பட்ட நேரம்: 16:10 (16/10/2017)

கடைசி தொடர்பு:16:10 (16/10/2017)

திறக்கப்பட்டது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்!

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உலகப்புகழ் பெற்றது. தென்மேற்குப் பருவமழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு ஓரளவு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதைத்தொடர்ந்து வடகிழக்குப் பருவமழையும் பெய்யத் தொடங்கி இருக்கிறது. இதனால் வேடந்தாங்கலைச் சுற்றியுள்ள வெள்ளைப்புத்தூர், மதுராந்தகம், உத்திரமேரூர் உள்ளிட்ட ஏரிகளில் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதனால் வேடந்தாங்கல் சரணாலயத்துக்குப் பறவைகளின் வருகை நாளுக்குநாள் கூடிக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் இன்று வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டது.

சரணாலய வனச்சரக அலுவலர் சுப்பையா, “வேடந்தாங்கல் ஏரியில் சுமார் 15 அடி அளவுக்குத் தண்ணீர் உயர்ந்துள்ளது. தற்போது நத்தைக்கொத்தி நாரை, வெள்ளை அரிவாள் மூக்கன், பெரிய நீர்காகம், சிறிய நீர்காகம், வக்கான், கூழைக்கடா உள்ளிட்ட சுமார் 20 வகையான பறவைகள் இதுவரை வந்திருக்கின்றன. தற்போது சுமார் 5,700 பறவைகள் இருக்கின்றன. செப்டம்பரிலிருந்து ஜனவரி வரை இனப்பெருக்கம் காலம். முட்டையிட்டு குஞ்சுகள் வளர்ந்த நிலையில் மே மற்றும் ஜூன் மாதங்களில் அவை கிளம்பிவிடும். இன்னும் மஞ்சள் மூக்கன் நாரை உள்ளிட்ட பறவைகள் வர வேண்டியுள்ளன. பறவைகள் இனப்பெருக்கம் காலமான டிசம்பர் மற்றும் ஜனவரியில் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். பழைய பைனாகுலர்களைப் பழுதுபார்த்து வைத்திருக்கிறோம். 500 மீட்டர் தொலைவில் இருக்கும் பறவைகளைப் பார்க்கும் வகையில் டிராவல் ஸ்கூப் எனப் புதிகாக இரண்டு பைனாகுலர் வாங்கி இருக்கிறோம்” என்கிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க