'மெர்சல் படம் ஓடும்போது தீக்குளிப்போம்': அரியலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தில் சலசலப்பு! | Police Complaint filed against Ariyalur district vijay Makkal iyakkam president Siva in Jayankondam PS

வெளியிடப்பட்ட நேரம்: 19:29 (16/10/2017)

கடைசி தொடர்பு:09:02 (17/10/2017)

'மெர்சல் படம் ஓடும்போது தீக்குளிப்போம்': அரியலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தில் சலசலப்பு!

அரியலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்கத் தலைவர் சிவாமீது ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் நகர நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.

அதில், ’16 வருஷமாக உழைத்த நகர நிர்வாகிகளை நீக்கிவிட்டுப் புதிய நிர்வாகிகளைத் தலைமைக்குத் தெரியாமல் அவராகவே நியமித்துக் கொண்டிருக்கிறார். நாங்கள் கேள்விகேட்டால் எந்தப் பதிலும் சொல்வதும் கிடையாது அதேபோல் அவரிடம் கேட்காமல் தலைமையிடம் பேசக் கூடாது என்று எச்சரிக்கிறார். நான் தலைமையைத் தொடர்புகொண்டதால் என்னை நீக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறார். உறுப்பினர்களை நீக்கும் அதிகாரம் மாவட்டத் தலைவருக்கு இல்லை, நிர்வாகிகளை நீக்கவோ சேர்க்கவோ நடிகர் விஜய் மற்றும் அவரின் தந்தைக்கு மட்டுமே உள்ளது. தீபாவளியன்று வெளியாகும் மெர்சல் படத்தின் ரசிகர்கள் காட்சியை எங்களுக்கு வழங்கக் கூடாது என்று மிரட்டுகிறார்’ என்று புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                            

இதுகுறித்து புகார் கொடுத்த ஜெயங்கொண்டம் நகர விஜய் மக்கள் இயக்கத் தலைவர் செல்வக்குமாரிடம் பேசினோம். அவர் கூறுகையில், ``இயக்கத்தின் மேலிடத்திலிருந்து நீக்கியதாகக் கடிதம் வந்தால் மட்டுமே நாங்கள் நீக்கப்பட்டதாக அர்த்தம், எங்களை இயக்கத்திலிருந்து நீக்க மாவட்டத் தலைவருக்கு அதிகாரம் இல்லை. மெர்சல் படத்தின் ரசிகர் காட்சிக்கான டிக்கெட்டுகளை எங்களுக்குத் தரவில்லை என்றால் படம் வெளியாகும் தியேட்டர் முன்பு தீக்குளிப்போம்’' என்றார். சமீபத்தில், ரங்கீலா என்ற மாணவியின் கல்விச் செலவு விவகாரத்தில் அரியலூர் மாவட்ட விஜய் ரசிகர் நற்பணி மன்றத்தினர் சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. 


[X] Close

[X] Close