வருகிறான் ஹாலிவுட்டின் முதல் கறுப்பின சூப்பர் ஹீரோ! வெளியானது 'ப்ளாக் பேந்தர்' படத்தின் ட்ரைலர்! | Marvel releases the first black superhero movie 'Black Panther' trailer

வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (17/10/2017)

கடைசி தொடர்பு:09:59 (17/10/2017)

வருகிறான் ஹாலிவுட்டின் முதல் கறுப்பின சூப்பர் ஹீரோ! வெளியானது 'ப்ளாக் பேந்தர்' படத்தின் ட்ரைலர்!

 ஹாலிவுட்டில், சூப்பர் ஹீரோ படங்கள் என்றாலே அமெரிக்காவையோ, இங்கிலாந்தையோ மையப்படுத்தி உலக அழிவிலிருந்து காக்கப் போராடும் மாவீரனின் கதை என்கிற ரீதியில்தான் இருக்கும். ஒன்றிரண்டு படங்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. இவற்றுள் பெரும்பாலான சூப்பர் ஹீரோ படங்கள் மார்வெல் அல்லது DC காமிக் புத்தகங்களைத் தழுவியே எடுக்கப்பட்டிருக்கும். ஆனால், அதே வரிசையில் இதுவரை வந்த சூப்பர் ஹீரோ படங்களிலிருந்து மாறுபட்டு, வித்தியாசமான ஆக்‌ஷன் படமாக வரவிருக்கிறது ‘ப்ளாக் பேந்தர்’.

ப்ளாக் பேந்தர்

‘ப்ளாக் பேந்தர்’ சூப்பர் ஹீரோவுக்கு அப்படி என்ன சிறப்பு? 1966-ம் ஆண்டு, முதன்முதலில் காமிக் புத்தகங்களில் இடம்பெற்ற ‘ப்ளாக் பேந்தர்’தான் உலகின் முதல் கறுப்பின சூப்பர் ஹீரோ! அந்தப் புத்தகம் அதிரடி ஹிட் அடிக்க, ‘ப்ளாக் பேந்தர்’ மனிதனின் கதையே தனி காமிக் புத்தகங்களாக வெளிவரத் தொடங்கின. ஆப்பிரிக்காவில் யாருக்கும் தெரியாத இடத்தில் இருக்கும் வக்கண்டா நகரை ஆளும் இளவரசனாக வரும் T’Challa என்ற இளைஞன்தான், இந்த ‘ப்ளாக் பேந்தர்’. மார்வெல் நிறுவனத்தின் முந்தைய படமான ‘கேப்டன் அமெரிக்கா சிவில் வார்’-ல் ஏற்கெனவே ஒரு முக்கியமான கதாபாத்திரமாக T’Challa வந்துவிட்டாலும், இதுதான் காமிக்ஸ் உலகின் முதல் கறுப்பின சூப்பர் ஹீரோவான ‘ப்ளாக் பேந்தர்’ன் முழு நீளத் திரைப்படம்.

வரும் பிப்ரவரி மாதம் வெளிவர இருக்கும் இந்தப் படத்தின் டீஸர் ஏற்கெனவே வெளியான நிலையில், தற்போது இதன் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்‌ஷன், வித்தியாசமான உலகம், சிலிர்ப்பூட்டும் இசை என மார்வெல் படங்களின் அனைத்து கமர்ஷியல் அம்சங்களும் இதிலும் இருக்கின்றன. முதல் கறுப்பின சூப்பர் ஹீரோவுக்கு உயிர்கொடுக்கும் இந்தப் படம், ஹாலிவுட் திரையுலகின் மிக முக்கியமான மைல்கல்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க