ஜெயலலிதா போல பள்ளிக் குழந்தைகளுக்கு 'Diary Milk' வழங்கிய எடப்பாடி..! | TN CM Edapadi Palanisamy follows former CM Jayalalitha's style

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (17/10/2017)

கடைசி தொடர்பு:11:41 (17/10/2017)

ஜெயலலிதா போல பள்ளிக் குழந்தைகளுக்கு 'Diary Milk' வழங்கிய எடப்பாடி..!

முதல்வர் அறையை பயன்படுத்தியது, ஆளுயர கட் அவுட்கள், விளம்பரங்கள், 110 விதியில் அறிக்கை வாசித்தல், கார் பவனி, வழிநெடுக வரவேற்பு என ஜெயலலிதாவை அப்படியே ஜெராக்ஸ் எடுத்துவருகிறார், முதல்வர் எடப்பாடி பழனிசாமி. ‘‘சந்திரமுகியாகவே மாறிவிட்டார்’’ என சமூக வலைதளங்களில் எடப்பாடி பழனிசாமி வறுபட்டுக்கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதா என்னவெல்லாம் செய்தாரோ, அதையெல்லாம் செய்து பார்த்துவிடத் துடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதன் லேட்டஸ்ட் வெளிப்பாடுதான், தனியார் பள்ளி மாணவர்களைச் சந்தித்தது. சிட்லபாக்கம் என்.எஸ்.என். மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களைக் கடந்த 13-ம் தேதி கோட்டையில் சந்தித்தார். அந்த மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் இனிப்புகளை வழங்கியிருக்கிறார். எத்தனையோ அரசுப் பள்ளிகள் மாநகராட்சிப் பள்ளிகள் இருக்கும்போது, என்.எஸ்.என். மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவர்களைச் சந்தித்தது ஏனோ?

மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் ஒரு விசேஷமும் இல்லை. ஆனால், இது ஜெயலலிதாவின் ஸ்டைல். கடந்த ஆண்டு ஜூலை 18-ம் தேதி, சென்னை அடையாறில் உள்ள ‘சிஷ்யா’ பள்ளி மாணவர்கள், புனித ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிப் பார்க்கப் போனார்கள். அப்படிப் போனவர்கள், முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார்கள். தலைமைச் செயலகத்தில் தனது அலுவலகத்துக்கு அழைத்து, அவர்களுடன் உரையாடினார் ஜெயலலிதா. மாணவர்கள் ஒவ்வொருக்கும் dairy milk சாக்லேட்டுகளைக் கொடுத்தார். சிரித்தபடியே சாக்லேட்டுகளை ஜெயலலிதா நீட்ட, அதை வாங்கிய மாணவர்கள் ‘தேங்ஸ்’ என்றார்கள்.

அதன்பிறகு, மாணவர்களோடு குரூப் போட்டோ எடுத்துக்கொண்டார். முதல்வர் சேம்பருக்குச் செல்லும் வராண்டாவில்தான் குரூப் போட்டோ எடுக்கப்பட்டது. ‘‘உங்களுடைய திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கு இதுதான் சரியான தருணம். படிப்பு மட்டும் அல்லாமல் விளையாட்டிலும் உங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்” என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார் ஜெயலலிதா. 

சிஷ்யா பள்ளியைப் போலவே என்.எஸ்.என். மெட்ரிகுலேஷன் பள்ளியும் பணக்கார பள்ளிதான். ஜெயலலிதாவைப் போலவே தனது அறையில் மாணவர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் ஜெயலலிதாவைப் போலவே dairy milk சாக்லேட்டுகளைக் கொடுத்தார். அவரைப் போலவே அறிவுரையும் சொல்லி, முதல்வர் சேம்பர் வராண்டாவில் மாணவர்களுடன் குருப் போட்டோ எடுத்துக்கொண்டார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close