வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (17/10/2017)

கடைசி தொடர்பு:14:20 (17/10/2017)

டெங்கு விஷயத்தில் அரசு சொன்ன மரண எண்ணிக்கையில் சந்தேகம் எழுப்பும் ஸ்டாலின்!

டெங்கு பாதித்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றித் தெரிந்துகொள்ள சென்னை, எழும்பூரில் இருக்கும் குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்றார், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்

ஸ்டாலின்

மருத்துவமனையில் சிகிச்சைபெறுபவர்களைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசினார் ஸ்டாலின். அப்போது அவர், `'டெங்கு விஷயத்தில் உண்மையான மரண எண்ணிக்கையை தரக்கூடாது என்று தனியார் மருத்துவமனைகளுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது. மத்திய அரசால் அனுப்பப்பட்ட நிபுணர் குழு, டெங்கு பாதிப்புகுறித்து மேலோட்டமாக ஆய்வு நடத்திவிட்டுச் சென்றுவிட்டது. அதனால், பெரிய பயன் இருக்காது. நிலவேம்புக் கஷாயம் வழங்குவது பற்றி எதிர்மறைக் கருத்துகள் இருக்கின்றன. அதைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கிறது'' என்று தெரிவித்தார்.