ஊழலுக்கு எதிராக உறுதி மொழி எடுத்த 21 லட்சம் பேர்!

நம் நாட்டில் அரசு அலுவலகம் முதல் தனியார்த்துறை வரை ஊழலும், முறைகேடுகளும் அதிகரித்துவிட்டன. பெரும்பாலான அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கையூட்டு பெறாமல் எந்தப் பணியையும் செய்வதில்லை. ஊழலில் ஈடுபடுவோரை ஊழல் கண்காணிப்புத்துறையும், சமூக ஆர்வலர்களும் அவ்வப்போது அம்பலப்படுத்துகிறார்கள். ஊடகங்கள் ஊழலுக்கு எதிராகத் தொடர்ந்து எழுதுகிறது, ஆனாலும் ஊழல் என்பது தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

விஜிலென்ஸ்


இந்நிலையில், ''ஊழல் செய்ய மாட்டேன், ஊழலை ஊக்குவிக்க மாட்டேன்''  என்று உறுதிமொழி கொடுப்பவர்களுக்கு மத்தியக் கண்காணிப்பு ஆணையம் சான்றிதழ் வழங்கி மரியாதை செய்து வருகிறது. கடந்தாண்டு முதல் செயல்படுத்திவரும் இந்த முயற்சியில் இதுவரை 35 ஆயிரம் நிறுவனங்களும், 21 லட்சம் மக்களும் உறுதிமொழி ஏற்று சான்றிதழ் பெற்றுள்ளார்கள். மக்கள் தொகை 120 கோடியை நெருங்கியுள்ள நம் நாட்டில் 21 லட்சம் பேர் மட்டும் ஊழலுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுள்ளது குறைவுதான் என்றாலும், இது ஒரு நல்ல தொடக்கம் என்கிறார்கள்.

இந்த விஷயம் இன்னும் மக்களிடம் பரவலாகச் செல்லவில்லை என்றும் சொல்லப்படுகிறது. ஊழலுக்கு எதிரான உறுதிமொழி ஏற்க மத்தியக் கண்காணிப்பு ஆணையத்தின் https//pledge.cvc.nic.in/pledge2.html இணையதளத்தில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பிய சில நொடிகளில் சிறந்த குடிமகன் என்ற சான்றிதழை அனுப்பிவைக்கிறார்கள். ஊழலை அனைத்து மட்டத்திலும் ஒழிக்க மத்தியக் காண்காணிப்பு ஆணையம் எடுத்துள்ள சிறந்த முயற்சி இது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!