மருத்துவர்கள் இல்லாததால் பெண் உயிரிழப்பு! - கோவை அரசு மருத்துவமனை அவலம் | Woman died due to carelessness of doctors in Coimbatore Government hospital

வெளியிடப்பட்ட நேரம்: 17:30 (17/10/2017)

கடைசி தொடர்பு:14:22 (18/10/2017)

மருத்துவர்கள் இல்லாததால் பெண் உயிரிழப்பு! - கோவை அரசு மருத்துவமனை அவலம்

கோவை அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால், பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரைச் சேர்ந்தவர் திவ்யா. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவருக்குத் திருமணம் ஆனது. இந்நிலையில், கடந்த வாரம் திவ்யாவுக்குக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

deepa
 

இதையடுத்து, கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருசக்கர வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட அவர், அடுத்தநாள் காலை அமரர் ஊர்தியில் பிணமாகக் கொண்டு செல்லப்பட்டார். இரவு நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால்தான், திவ்யா உயிரிழந்துவிட்டதாக, அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

divya and deepa
 

இதுகுறித்து திவ்யாவின் சகோதரி தீபா, "என் தங்கைக்கு டெங்குக் காய்ச்சல் இல்ல. நார்மல் காய்ச்சல்தான். சரியாகிடும்ணு டாக்டர் சொன்னாங்க. ஆனா, மிட் நைட்ல அவளுக்கு ரொம்ப முடியாம போய்டுச்சு. டாக்டருங்க இருந்திருந்தா, இப்படி ஆகியிருக்காது. சரி அவ இறப்புக்குக் காரணம் தெரிஞ்சுக்கலாம்ணு அந்த வார்டு டாக்டர்கிட்ட போய் கேட்டேன். அவங்க அதெல்லாம் கொடுக்க முடியாது. அப்படி ஒரு ரூலே இல்லை. எங்களுக்குக் கொடுக்கணும்னு அவசியம் இல்லனு சொல்றாங்க. இப்ப என்ன பண்றதுனே தெரியல. தனியார் மருத்துவமனைய நம்பாம அரசு மருத்துவமனைக்கு வந்ததுக்கு இதுதான் பலனா?" என்றார் கண்ணீருடன்.