மிரளவைத்த டெங்கு கேள்விகள்! பதில் கூறாமல் தவிர்த்த அமைச்சர்

டெங்கு பாதிப்பு குறித்து, கடந்த 15-ம் தேதி மத்திய குழுவும், 16-ம் தேதி தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையை பார்வையிட்டனர். அதைத்தொடர்ந்து இன்று செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். குழந்தைகள் வார்டுக்குச் சென்ற விஜயபாஸ்கர் அங்கு சிகிச்சை பெறுபவர்களை சந்தித்துப் பேசினார்.

விஜயபாஸ்கர் டெங்கு ஆய்வு

பின்பு மருத்துவர்களிடம் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அந்த அறையில் உள்ள கழிவறைகளை சுற்றிப்பார்த்தார். உணவுக்கழிவுகள் மற்றும் குப்பைகள் இருப்பதைக் கண்டு முகம்சுழித்தார் விஜயபாஸ்கர்.

விஜயபாஸ்கர் டெங்கு ஆய்வு

மருத்துவமனையில் உள்ள டெங்கு பாதிப்பு பிரிவுகளை ஆய்வுசெய்த பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, மத்தியக் குழு ஆய்வு செய்ததையும், டெங்குவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றியும் பேசிவிட்டு கேள்விகள் கேட்பதாக இருந்தால் கேட்கலாம் என்றார். அப்போது விஜயகாந்த் என ஒரு பத்திரிகையாளர் கேள்வியைத் தொடங்க, அவர் கேள்வியை முடிக்கும் முன்பாகவே அடுத்த நிருபர் பக்கம் முகத்தை திருப்பினார். அந்த பத்திரிகையாளரோ டெங்குவால் எத்தனை பேர் இதுவரை உயிரிழந்திருக்கிறார்கள் என கேட்க ‘நீங்க இந்த மாதிரி கேள்விகளைத்தான் கேட்குறீங்க’ எனக் கூறிக்கொண்டே விறுவிறுவென காரில் ஏறிக்கொண்டார். பத்திரிகையாளர்கள் விடுவதாய் இல்லை. மீண்டும் அவரிடம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தனர். ‘நீங்க கேமராவை ஆன் பண்ணாம இருந்தா நான் பேசுவேன்’ என முகத்தை திருப்பிக் கொண்டு புறப்பட்டார் விஜயபாஸ்கர். டெங்கு பீதி அமைச்சருக்கு வந்துவிட்டது போலும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!