வெளியிடப்பட்ட நேரம்: 23:30 (17/10/2017)

கடைசி தொடர்பு:12:09 (18/10/2017)

ராமநாதபுரத்தில் நடிகர் தாமு கலந்துகொண்ட உலக கை கழுவும் தின விழா!

ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் உலக கை கழுவும் தின விழாவைக் கொண்டாடும் விதமாக கை கழுவுவது எப்படி என்ற செயல்முறை விளக்கம் பள்ளி மாணவர்களுக்கு செய்து காட்டப்பட்டது. இதில், நடிகர் தாமு கலந்துகொண்டார். 

உலக கை கழுவும் தின நிகழ்ச்சியில் தாமு பங்கேற்பு
 

ராமநாதபுரம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் உலக  கை கழுவும் தின விழா கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் விழாவுக்குத் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் சண்முகராஜேஸ்வரன், ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, கார்த்திகேயன், ராமநாதபுரம் ரோட்டரி சங்கத் தலைவர்  வீரபூபதி, செயலாளர்  பழனி  ஆகியோ ர் முன்னிலை வகித்தனர். ரோட்டரி  சங்க  துணை  ஆளுநர்கள்  டாக்டர்.ஜெகதீஷ்  சந்திர  போஸ், விஜயகுமார்  ஆகியோர்  கை கழுவுவதால்  ஏற்படும்  பலன்கள்  குறித்து  விளக்கிப் பேசினார்கள். ரோட்டரி  சங்க  ஆளுநர்  டாக்டர்.சின்னத்துரை அப்துல்லாவும், திரைப்பட   நடிகர்  தாமுவும்  கையை  சோப்பினால்   எவ்வாறு   கழுவ  வேண்டும்  என  செயல்முறை  விளக்கம்  செய்து காட்டினார்கள்.
 ராமநாதபுரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 16 பள்ளிகளில் இருந்து வந்திருந்த ஜூனியர் ரெட்கிராஸ் உள்ளிட்ட 1,400 மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.