இலங்கைக்கு கடத்த இருந்த ரூ.30 லட்சம் மதிப்புடைய கடல் அட்டை பறிமுதல்

ராமநாதபுரம் அருகே இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்புடைய கடல் அட்டையை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

 

ராமநாதபுரம் அருகே உள்ள உச்சிப்புளி வட்டான் வலசை கிராமத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, உச்சிப்புளி போலீஸார், உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் வட்டான் வலசை கிராமத்தில் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் சீனிமாரி என்பவரது தென்னந்தோப்பில் பதப்படுத்தப்பட்ட 400 கிலோ கடல் அட்டைகள் சாக்கு மூடைகளில் கட்டப்பட்டும், பதப்படுத்தாத 200 கிலோ கடல் அட்டைகள் பதப்படுத்துவதற்காக பாத்திரங்களில் நிரப்பப்பட்டும் இருந்ததைக் கண்டறிந்தனர். 

அந்த கடல் அட்டைகளை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை எடுத்துச் செல்ல பயன்படுத்திய வாகனம் மற்றும் பதப்படுத்த பயன்படுத்திய கேஸ் சிலிண்டர், அடுப்பு ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் சுமார் 30 லட்சம் மதிப்புடையது என்று போலீஸார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வட்டான் வலசை கிராமத்தைச் சேர்ந்த சீனிமாரி என்பவரை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!