தீபாவளிப் பண்டிகை: தமிழகத்தில் உற்சாகக் கொண்டாட்டம்!


தீபாவளி

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது. மக்கள் அதிகாலையிலேயே எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளித்து, புத்தாடைகளை அணிந்து மகிழ்ந்தனர். வீடுகளில் படையலிட்டும், அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு பலகாரங்களைப் பரிமாறியும் உற்றார், உறவினர்கள் வீடுகளுக்குச் சென்றும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினர். அதிகாலை முதலே சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு முக்கிய நகரங்களில் பட்டாசுகள் வெடிக்கும் சத்தம் விண்ணைப் பிளந்தன. இனிப்புகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு, தீபாவளிப் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடிவருகிறார்கள்.

வீடுகளில் படையலிட்ட பின்னர், குடும்பத்தினருடன் அருகில் உள்ள கோயில்களுக்குச் சென்று கடவுளை வழிபட்டனர். குறிப்பாக, தீபாவளிப் பண்டிகை திருமாலுடன் தொடர்புடையது என்பதால், மக்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபாடு நடத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!