வெளியிடப்பட்ட நேரம்: 21:30 (18/10/2017)

கடைசி தொடர்பு:07:46 (19/10/2017)

விரைவில் வடகிழக்குப் பருவமழை: இரண்டு நாள்களுக்கு தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

வடகிழக்குப் பருவமழை விரைவில் தொடங்கவிருப்பதால், தமிழகத்தில் அடுத்த இரண்டு நாள்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

வரும் 25-ம் தேதிக்குப் பிறகுதான் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்றும், தொடர்ந்து நீடிக்கும் தென்மேற்குப் பருவமழை, வலுவிழக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, அதே இடத்தில் நீடிக்கிறது என்றும் அது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், மேலும் இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் சென்னையில், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.