சென்னையில் ஒலி மாசுபாடு குறித்து இன்று மாலையில் அறிக்கை..!

சென்னையில், தீபாவளிப் பண்டிகையின்போது ஏற்பட்ட ஒலி மாசின் துல்லிய அளவை, தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இன்று மாலை தெரிவிக்கிறது. 


தமிழகம் முழுவதும், தீபாவளிப் பண்டிகை நேற்று சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. தீபாவளிப் பண்டிகையின் முக்கிய கொண்டாட்டமான பட்டாசு வெடித்தல் வழக்கத்தைவிட அதிகமாகவே இருந்தது. நேற்று, சென்னையின் முக்கிய இடங்களில் பட்டாசு வெடித்ததன் காரணமாக அதிக மாசு இருந்ததாகப் பொதுமக்கள் உணர்ந்தனர். அண்ணாசாலை, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் மாலை நேரம் முழுதும் கரும்புகை சூழ்ந்திருந்தது. பண்டிகையால் ஏற்பட்ட ஒலி மாசு குறித்து தமிழக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஐந்து இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. அந்த ஆய்வுக்குப் பிறகு, வழக்கத்தைவிட அதிக அளவு ஒலி மாசு இருந்தது என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமிருந்து தகவல் வந்துள்ளது. 6 மணி முதல் 10 மணி வரையிலான நேரத்தில் அதிக அளவு ஒலி மாசு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாசுபாட்டின் துல்லியத்தன்மை இன்று மாலை வெளியிடப்படும் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!