'ஜி.எஸ்.டி வரி முறை சீக்கிரமே மக்களுக்கு பழகிவிடும்': சொல்கிறார் இல.கணேசன் | People will adopt to GST, L.Ganesan

வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (19/10/2017)

கடைசி தொடர்பு:13:07 (19/10/2017)

'ஜி.எஸ்.டி வரி முறை சீக்கிரமே மக்களுக்கு பழகிவிடும்': சொல்கிறார் இல.கணேசன்

'ஜி.எஸ்.டி வரி முறையில் பல சிரமங்கள் இருந்தாலும், அது மக்களுக்கு சீக்கிரமே பழகிவிடும்' என்று பா.ஜ.க-வின் எம்.பி., இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

இல.கணேசன்

 மேலும், 'ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மாநில அரசுகளுக்கும் பங்கு இருக்கிறது. ஜி.எஸ்.டி வரி விகிதங்கள் தொடர்ந்து மாற்றி அமைக்கப்பட்டும் வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் ஜி.எஸ்.டி வரி முறை மக்களுக்கு பழகிவிடும்' என்றவர்,  'டெங்கு ஒழிப்பில் தமிழக  அரசு முடிந்த வரை நன்றாகவே செயல்பட்டுவருகிறது. இருப்பினும், டெங்குவின் வீரியமும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டி ருக்கிறது. அரசு மட்டும் டெங்குவை கட்டுப்படுத்திவிட முடியாது. மக்களும் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். நிலவேம்பு கஷாயத்தை பற்றி வித்தியசாமான கருத்துக்களை கமலஹாசன் சொல்லி வருகிறார். அதற்காக அவர் டெங்குவுக்கோ டெங்கு கொசுவுக்கோ ஆதரவாளர் அல்ல. தன்னை முன்னிலைப் படுத்தவே இதுபோன்ற கருத்துக்களை சொல்லி வருகிறார்' என்றார்.

மேலும், 'எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில அரசு கூறுகிறது. ஆனால், அமைச்சர் நட்டாவிடம் நான் கேட்டபோது, 'மாநில அரசு பரிந்துரைத்தால் அதை நிறைவேற்றிக்கொடுப்போம்' என்கிறார். அநேகமாக, மதுரையில்தான் எய்ம்ஸ் மருத்துவமனை வரும் என்று நினைக்கிறேன்' என்றார்.