வெளியிடப்பட்ட நேரம்: 22:05 (19/10/2017)

கடைசி தொடர்பு:22:05 (19/10/2017)

வட்டி குறைக்கப்பட்டதால் குறையும் கருணாநிதியின் உதவித்தொகை

வைப்புநிதிக்கு வட்டிவிகிதம் குறைக்கப்பட்டதால், கலைஞர் அறக்கட்டளைமூலம் உதவி பெறுவோர் எண்ணிக்கை குறைந்துவருகிறது. 2005 -ம் ஆண்டு தொடங்கப்பட்ட கலைஞர் அறக்கட்டளை சார்பில், கலைஞருக்குக் கிடைத்த 5 கோடியை, தேசிய வங்கியில் வைப்பு நிதியாக டெபாசிட் செய்யப்பட்டது. பின்பு, அதில் ஒருகோடியை புத்தகப் பதிப்பாளர் சங்க வளர்ச்சிக்காக அளிக்கப்பட்டது. மீதமுள்ள நான்குகோடி மூலம் மாதம்தோறும் கிடைக்கும் வட்டித்தொகையை, நலிந்த கட்சியினர், கல்வி, மருத்துவ உதவிகள் கேட்ட ஏழைகளுக்கு அறக்கட்டளை மூலம் வழங்கப்பட்டுவந்தது. இதன்மூலம் பலர் பயனடைந்துவந்தனர்.

கலைஞர்

2005-ம் ஆண்டு முதல் இன்று வரை, வட்டியாகக் கிடைத்த 4 கோடியே 41 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய், நலிந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது வங்கிகள், வைப்பு நிதிக்கு வட்டியைக் குறைத்துவிட்டதால், உதவி பெறுவோரின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுவிட்டது. கடந்த மாதத்துக்கு கிடைத்த வட்டியில், 25 ஆயிரம் வீதம் எட்டு பேருக்கு 2 லட்ச ரூபாய் வழங்கப்பட்டது. முன்பு, மாதத்துக்கு 3 லட்சம் வீதம் வட்டி கிடைத்தபோது, அதிகமானோருக்கு உதவித்தொகை வழங்கப்பட்டுவந்தது. தற்போது, 2 லட்சம் மட்டும் கிடைப்பதால், எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

பயனாளிகளை சென்னைக்கு நேரில் அழைத்து தொகையை வழங்கியவர்கள், தற்போது உதவிபெறுபவர்களின் போக்குவரத்துச் செலவை தவிர்ப்பதற்காக, அவரவர் முகவரிக்கே செக்காக அனுப்பிவைக்கிறார்கள். வங்கியில் வட்டி உயர்த்தப்பட்டால், இன்னும் கூடுதலான நபர்களுக்கு பலன் கிடைக்கும் என்கிறார்கள்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க