போதையின் பிடியில் தவிக்கும் வட சென்னை...! | The drunkenness of the teaching North Chennai ... Puliyanthoppu Drug products in ample sales

வெளியிடப்பட்ட நேரம்: 23:10 (19/10/2017)

கடைசி தொடர்பு:08:06 (20/10/2017)

போதையின் பிடியில் தவிக்கும் வட சென்னை...!

                   போதைப் பொருட்கள்

சென்னையில் பான்குட்கா விற்பனை வெகுவாகக் குறைந்துவிட்டது. நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவுக்குப் பின் பெட்டிக் கடைகளில், நடந்து வந்த பரபரப்பான விற்பனை இப்போது இல்லை. அதேவேளையில், பான்குட்காவே கிடைக்கவில்லை என்றும் சொல்ல முடியாது. 'ஐந்து ரூபாய்க்கு விற்கப்பட்ட எம்.டி.எம். பான்குட்கா, இப்போது பத்து ரூபாய். அதிக வசூலைக் குவித்து வந்த 'ஹான்ஸ்' புகையிலை பாக்கெட்டின் முந்தைய விலை 10 ரூபாய்.  தடை வந்தபின்,  இதன்விலை நான்கு மடங்கு அதிகமாகி விட்டது' என்கிறார்கள், வாடிக்கையாளர்கள். பான்குட்கா மீதான தடை வருவதற்கு முன்பே ஒரு சில போலீஸ் அதிகாரிகள், அவரவர் பகுதியில் பிடியை இறுக்கியதால் குறிப்பிட்ட லிமிட்டில் பான்குட்கா விற்கப் படாமல் இருந்தன. இதனால், போதை வியாபாரிகள், மாற்று ஏற்பாடுகளில் இறங்கிவிட்டனர்.

மிகவும் போதைதரக்கூடிய, போலியான டாஸ்மாக் மதுபானத்தை சில பகுதிகளில் விற்கின்றனர். பிற போதைப் பொருள்களோடு இந்த டாஸ்மாக்கும் தொழில் போட்டியில் இருக்கிறது. சென்னையில் பெரியமேடு, டி.பி. சத்திரம், சேத்துப்பட்டு, பேசின்பாலம், புளியந்தோப்பு, கே.எம்.கார்டன், ஆர்.கே.நகர், கண்ணகிநகர் போன்ற பகுதிகள் போதைப் பொருள்களுக்கு பிரசித்தமான பகுதிகள். போலீஸாரின் தொடர் நடவடிக்கைகளால், இதில் பல பகுதிகள் மாறிவிட்டன.

வடசென்னையின் மையப் பகுதியாக அறியப்படும், கே.எம்.கார்டன், புளியந்தோப்பு, பேசின்பாலம் போன்ற பகுதிகளில் மட்டும் இன்னும் போதைப் பொருள் விற்பனை வேகம் குறையவில்லை என்று கூறப்படுகிறது. போதைப் பொருள்களை விற்பதற்கு ஏதுவாக இரவுகளில் சில மணி நேரத்துக்குச் செயற்கையாக மின் தடையை ஏற்படுத்தி வைக்கும் அளவுக்கு 'தொழில்' அமோகமாக நடக்கிறது. மாலை வேளைகளில் வீட்டை விட்டு வெளியில் வர பெண்களும், சிறுவர்களும் அச்சப்பட்டு வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர்.

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய பகுதியாக இருக்கும் இந்தப் பகுதிகளிலிருந்து கல்வியாளர்களோ, சமூக மாற்றத்துக்கான தலைவர்களோ உருவாகாமல் போவதற்கு இதுபோன்ற சுற்றுச்சூழலே காரணமாக அமைந்து விடுகிறது. சிறுவர்களின் கைகளில் புத்தகங்களுக்குப் பதில் கத்தி வருவதற்கு காரணமும் சுற்றுச் சூழலே. அதற்கு மேலும் வலுவூட்டுவது, போதைப் பொருள் விற்பனை. இது ஒருவர் அல்லது ஐவரோடு முடிந்து போகிற வணிகமல்ல. ஒரு சமூகத்தையே பல்வேறு வழிகளில் அரித்து அழித்து விடுகிற கறையான்...