தமிழ் வாழ்த்துகளுடன் பயணிகளை வரவேற்கும் சிங்கப்பூர் பேருந்துகள்!

ம்ம ஊரு பஸ், தீபாவளி அன்றைக்குக்கூட புதுச்சட்டையைக் கிழித்துவிடும். படத்தில் நீங்கள் காண்பது சிங்கப்பூர் பஸ். தீபாவளியையொட்டி தமிழிலில் வாழ்த்துக் கூறி பயணிகளை வரவேற்கிறது. சிங்கப்பூரில் குறிப்பிடத்தக்க அளவில் தமிழர்கள் வசிக்கின்றனர்.

தீபாவளி வாழ்த்துடன் பயணிகளை வரவேற்கும் பேருந்து

இதனால், தமிழ் அங்கு ஆட்சி மொழியும்கூட.  தீபாவளி, பொங்கல் பண்டிகைகள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும். இந்த தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூர் பேருந்துகள் , மெட்ரோ ரயில்கள் பண்டிகையைக் கொண்டாடும் வகையில், அழகுற அலங்கரிக்கப்பட்டு இயக்கப்பட்டுவருகின்றன. மெட்ரோ ரயில் நிலையங்களிலும் தமிழ் மொழியில் 'தீபாவளி வாழ்த்துகள்' என எழுதப்பட்டிருந்தன. 

தீபாவளி வாழ்த்துகள் எழுதப்பட்ட பஸ்

இந்தியர்கள், தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் 'லிட்டில் இந்தியா ' பகுதி தோரணங்கள் கட்டப்பட்டு மின்விளக்கு வெளிச்சத்தில் ஜொலித்தது.  அலங்காரத்தைக் காணவே ஏராளமான தமிழர்கள் தீபாவளியன்று மெட்ரோ ரயில் பயணம் மேற்கொண்டனர். இந்த மாதம் முழுவதும், பேருந்துகளும் ரயில்களும் இதேபோன்று அலங்காரத்துடன் இயக்கப்படும் என  சிங்கப்பூர் தரைவழிப் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.

சிங்கப்பூர் மெட்ரோ ரயில்

அலங்கரிக்கப்பட்ட பேருந்து, மெட்ரோ ரயில் புகைப்படங்களை சிங்கப்பூர் தரை வழிப்போக்குவரத்தை நிர்வகிக்கும் லேண்ட் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள், உற்சாகமான தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!