வெளியிடப்பட்ட நேரம்: 19:35 (20/10/2017)

கடைசி தொடர்பு:19:35 (20/10/2017)

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசுவதுக்குத் தடை தொடரும் - சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் விற்கப்படும் பாக்கெட் பாலில் கலப்படம் இருப்பதாகத் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தமிழக மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. 

இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. ஏற்கெனவே இந்த வழக்கில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விஜய், டோட்லா, ஹட்சன் ஆகிய மூன்று நிறுவனங்கள் குறித்து பேச தடை விதித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குறிப்பிட்ட அந்த மூன்று நிறுவனங்கள் குறித்து அமைச்சர் பேச விதிக்கப்பட்ட தடை தொடரும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வழக்கு முடியும் வரை அமைச்சர் இது குறித்து பேச தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 

மேலும் விஜய், டோட்லா, ஹட்சன் ஆகிய மூன்று நிறுவனங்களும் தங்கள் நிறுவனப் பாலை அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வு நிறுவனத்தில் பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது, சென்னை உயர் நீதிமன்றம்.