ராஜ் டிவி நிர்வாக இயக்குநரின் மகளை மணக்கிறார் சினிமா தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

'இறைவி', 'காதலும் கடந்து போகும்', 'பாம்புச் சட்டை', 'சதுரங்க வேட்டை 2' போன்ற படங்களின் தயாரிப்பு நிறுவனம் அபி & அபி பிக்சர்ஸ்.  இந்தக் குழுமத்தின் நிர்வாக இயக்குநராகவும் துணைத் தலைவராகவும் அபினேஷ் இளங்கோவன் பொறுப்பு வகிக்கிறார். இவருக்கும் பல வெற்றிப் படங்களுக்கான உரிமையைப் பெற்றுள்ள ராஜ் தொலைக்காட்சியின் இயக்குநர் ரவீந்திரனின் மகளான நந்தினிக்கும் கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், இவர்களின் திருமண நாளை அறிவிக்கவும் அழைப்பிதழ் வழங்கவும் பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தச் சந்திப்பில் சித்ரா லக்ஷ்மணன், அபி & அபி குழுமத்தின் தலைவர் இளங்கோவன், ராஜ் தொலைக்காட்சியின் இயக்குநர் ரவீந்திரன் ஆகியோர் இரு வீட்டார் சார்பில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தயாரிப்பாளர்

வரும் அக்டோபர் 27-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று இவர்களின் திருமண நிகழ்வு திருவான்மியூரில் நடக்கவிருக்கிறது என்ற அறிவிப்பை வெளியிட்டதோடு மணமகன் அபினேஷ் இளங்கோவன் அனைவருக்கும் அழைப்பிதழை வழங்கி அழைப்பு விடுத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!