வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (21/10/2017)

கடைசி தொடர்பு:19:30 (21/10/2017)

டெங்குவுக்கு காஞ்சிபுரம் மாணவி பலி!

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகள் தொடர்கிறன. இந்த நிலையில் டெங்கு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

டெங்கு காய்சலுக்கு மாணவி பலி

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த பாண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்லப்பன். இவரின் மகள் கோமதி. பாண்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 16-ம் தேதி காய்ச்சல் காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டெங்கு காய்ச்சல் காரணமாக அவருக்கு உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. மேலும் காய்ச்சலின் தீவிரம் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் 18-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்யப்பட்டார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். 15-ம் தேதி மத்தியக்குழு ஆய்வின்போது, இந்த மருத்துவமனையில் டெங்கு பாதிப்புக்கு ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என மருத்துவர்கள் கூறினார்கள். அதுபோல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் 17-ம் தேதி செங்கல்பட்டு மருத்துவமனையை ஆய்வு செய்தார். இந்த மருத்துவமனையில் டெங்குவுக்கு சிகிச்சையளிக்க அனைத்து வசதிகளும் இருக்கின்றன என்றார். இந்த நிலையில் மாணவி ஒருவருக்குத் தரமான சிகிச்சை கொடுக்க முடியாமல், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க