வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (22/10/2017)

கடைசி தொடர்பு:08:08 (22/10/2017)

குஜராத்தில் ஹர்திக் படேலின் கூட்டாளிகள் அனைவரையும் கட்சியில் சேர்த்துக்கொண்ட பாரதிய ஜனதா! 

குஜராத்தில் படேல் சமூக மக்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று 24-வயது இளைஞர் ஹர்திக் படேல் போராட்டத்தால் குஜராத் மாநிலமே ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டது. இவரைக் கட்டுப்படுத்த பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இந்தநிலையில் வர இருக்கிற குஜராத் தேர்தலை முன்னிட்டு ஹர்திக் படேலின் முக்கிய கூட்டாளிகளை தன்பக்கம் இழுத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. 

ஹர்திக் படேல் அமித் ஷா

ஹர்திக் படேலின் முக்கிய நண்பர்களான வருண் படேல், ரேஷ்மா படேல், மகேஷ் படேல், கீதா படேல் ஆகியோர் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா முன்னிலையில் பா.ஜ.கவின் இணைந்தனர். பாஜ-வில் இணைந்தவர், 'காங்கிரஸ் கட்சி படேல் சமூகத்தை வங்கி வங்கிகளாகப் பயன்படுத்துவதை தடுக்கவே பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளோம். எங்களுடைய கோரிக்கைகளை பாரதிய ஜனதா கட்சி நிச்சயம் நிறைவேற்றும்' என்று நம்பிக்கையில் பா.ஜ-வில் சேர்ந்திருப்பதாக' கருத்து தெரிவித்திருக்கிறார்கள். 

தன்னுடைய நண்பர்கள் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளது குறித்த ஹர்திக் படேல் தனது டிவிட்டர் பக்கத்தில் 'மக்கள் என் பக்கத்தில்தான் இருக்கிறார்கள். மக்களுக்காக என்னுடைய போராட்டம் தொடரவே செய்யும்' என்று பதிவு செய்திருக்கிறார். பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தலைவர் அல்பேஷ் தாகோரை காங்கிரஸ் கட்சியில் சேர்க்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.