Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'ஹெச்.ராஜாவுக்கு விஜய் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பார்!' - நாஞ்சில் சம்பத் கலகல

அ.தி.மு.க அம்மா அணியைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து 'மெர்சல்' படம் பற்றி ஹெச்.ராஜா கூறியது தொடர்பாக கருத்து கூறினார். 

நாஞ்சில் சம்பத்

செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத், 'தமிழகத்தில் மிகவும் செல்வாக்கு பெற்ற நபர் ஹெச்.ராஜா. சாரணர் இயக்கத் தேர்தலில் போட்டியிட்டு 40 ஓட்டுகள் வாங்குகிறார் என்றால், அவர் எவ்வளவு செல்வாக்கு பெற்றவராக இருக்க வேண்டும். காவல்துறை அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இணையதளத்தில் அந்தத் திரைப்படம் அதற்குள் வந்துவிட்டதா என்பதுகூட இன்னும் சரியாக தெரியவில்லை. ஆனால் ஹெச்.ராஜா, இணையதளம் வாயிலாக 'மெர்சல்' திரைப்படத்தைப் பார்த்திருக்கிறேன் என்று பகிரங்கமாக சொல்கிறாரே? அவர்மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மெர்சல் படத்துக்கு நல்ல விளம்பரம் தேடித்தந்ததால் ஹெச்.ராஜாவுக்கு நடிகர் விஜய் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருப்பார்' என்று கருத்து தெரிவித்தார். 
 

முன்னர் ஹெச்.ராஜா, தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ‘நான் மெர்சல் படத்தை இணையத்தில் பார்த்தேன்’ என்று குறிப்பிட்டார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement