Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகளுக்கு இடையில் பிளவு இருக்கிறதா?' - கே.பி.முனுசாமி பதில்

இரட்டை இலைச் சின்னம் எந்த அணிக்கு கிடைக்கும் என்பது குறித்து தேர்தல் கமிஷன் விசாரணை நடத்தி வரும் சூழலில் இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு மிகவும் நெருக்கமானவரான கே.பி.முனுசாமி, 'இரட்டை இலைச் சின்னம் தொடர்பான வழக்கில் சசிகலா தரப்பு போலியான ஆவணங்களை சமர்பித்துள்ளனர். எங்கள் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டதில் ஒன்று கூட போலியான ஆவணங்கள் இல்லை. முறையான ஆவணங்களை கொடுத்துள்ளதால், எங்களுக்கு கண்டிப்பாக இரட்டை இலைச் சின்னம் கிடைக்கும்' என்று உறுதிபடக் கூறினார்.

கே.பி.முனுசாமி

பின்னர், 'ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் அணிகளுக்கு இடையில் மீண்டும் பிளவு ஏற்பட்டுள்ளதா?' என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, 'பொது எதிரியை வீழ்த்துவதற்காக, சமூக விரோத சக்திகளிடமிருந்து கட்சியை மீட்பதற்காக எங்கள் அணியினர் தர்மயுத்தம் நடத்தினோம். சசிகலா குடும்பத்தை நீக்க வேண்டும், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து அறப்போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்கள் கோரிக்கைகளை ஈ.பி.எஸ் அணியினர் ஏற்றார்கள். அதனால், இரண்டு அணிகளும் இணைந்தது. இரு அணி தொண்டர்கள் மத்தியில் சில கசப்புகள் இருந்தாலும் அது சரியாகிவிடும். இரு அணிகளுக்கும் இடையில் சின்னச் சின்ன சச்சரவுகள் இருக்கிறது. பிரச்னைகள் இல்லவே இல்லையென்று நான் சொல்ல விரும்பவில்லை. அப்படி இருக்கும் பிரச்னைகள் சீக்கிரமே சரியாகிவிடும்' என்று பதிலளித்தார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close