Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மெர்சல்' பற்றி வாட்ஸ்அப்பில் வந்த வீடியோவை மட்டும்தான் பார்த்தேன்: ஹெச்.ராஜா விளக்கம்!

`மெர்சல் திரைப்படத்தை இணையத்தின் வாயிலாக பார்த்தேன்' என்று ஹெச்.ராஜா கூறினார் என்று தகவல் வந்ததையடுத்து, நடிகர் சங்கத் தலைவர் விஷால், ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். இதற்குப் பதில் அளிக்கும் விதத்தில் ஹெச்.ராஜா தற்போது பேட்டி அளித்துள்ளார்.  

ஹெச்.ராஜா

இதுகுறித்து பேசிய அவர், `மத்திய அரசு குறித்து தவறான தகவல்கள் `மெர்சல்' திரைப்படத்தில் வந்துள்ளதாக எனக்கு போனில் கூறப்பட்டது. மேலும், அரசை விமர்சிக்கும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதைத்தான் நான் பார்த்தேன். அந்த குறிப்பிட்ட காட்சிகளை மட்டும்தான் நான் பார்த்தேன் என்று கூறியிருந்தேன். ஆனால், அது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா பற்றி வரும் காட்சிகள் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் ஏற்கெனவே வந்துவிட்டன. அது எனக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதைப் பார்த்தேன். அதை நான் யாருக்கும் அனுப்பக் கூட இல்லை. அப்படி அனுப்பி இருந்தால் கூட, நான் தார்மீக ரீதியில் தவறிழைத்துவிட்டேன் என்று கூறலாம். என் போனுக்கு வரும் ஒரு வீடியோவை நான் ஏன் பார்க்கக் கூடாது?' என்று விஷாலுக்குப் பதில் அளிக்கும் விதத்தில் பேட்டி அளித்துள்ளார். 

முன்னர் விஷால், `ஒரு தேசியக் கட்சியின் தேசியச் செயலாளர் பொறுப்பில் இருப்பவர் பொதுவெளியில் ‘நான் திருட்டுத்தனமாக இணையத்தில் புதிய படத்தை சட்டவிரோதமாக பார்த்தேன்’ என்று ஒப்புக்கொண்டிருப்பது மிகவும் வேதனையளிக்கிறது. ஒருவேளை பைரசி எனப்படும் திருட்டுக் குற்றத்தை சட்டபூர்வமாகவே ஆக்கிவிட்டதா அரசுகள்? அதனால்தான் இந்த விஷயத்தில் சினிமா சிதைந்து அதை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கின்றனவா இந்த அரசுகள் என்ற சந்தேகம் எழாமல் இல்லை.

எச். ராஜா அவர்களுக்கு... மக்கள் அறிந்த ஒரு தலைவராக இருந்துகொண்டு வெட்கமே இல்லாமல் எப்படி இப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களைப் போன்ற ஒரு அரசியல்வாதி ஒரு படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பது என்பது ஒரு உண்மையான குடிமகனாகவும், கடின உழைப்பாளியாகவும், எதை செய்வதற்கு முன்பும் ஆழ்ந்து யோசித்து முடிவெடுப்பவனாகவும் எனக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. இது மிகவும் தவறான முன்னுதாரணம். இது எங்கள் மனதை கடுமையாகப் பாதித்துள்ளது. தங்களது செயலுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கேட்பதோடு பைரசியை ஒழிக்க அரசு கடுமையான சட்டத்தை இயற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று காட்டமாக தெரிவித்திருந்தார். இதற்குத்தான் தற்போது ஹெச்.ராஜா பதிலளித்துள்ளார். 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close