ஒரே நாளில் 3.17 லட்சம் ரூபாய் அபராதம்… டெங்கு ஆய்வில் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை!

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஊரப்பாக்கம் பகுதியில் இன்று, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா ஆய்வு செய்தார். தேசிய நெடுஞ்சாலை, அடுக்குமாடி குடியிருப்புகள், கடைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட நீர் தேங்கும் இடங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வுசெய்தார். அவருடன் 62 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர். மேலும், அதிக அளவு கொசு உற்பத்தியாகும் இடங்களுக்கு அபராதம் விதித்தார்.

டெங்கு, மாவட்ட ஆட்சியர் பொன்னையா

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பொன்னையா, “டெங்கு கொசுவை கட்டுப்படுத்தும் ஒரு முயற்சிதான் இது. அடுக்குமாடி குடியிருப்புகள், நகர்ப்புறங்களில் கொசுக்கள் மிகுந்துள்ளன. வீடுகள், கடைகள், தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட குப்பைகள் அதிகம் தேங்கும் பகுதிகளில் ஆய்வுசெய்து வருகிறோம். வீட்டின் அருகே உள்ள காலி இடங்களில் குப்பைகளை வீசுவதால், அதில் இருக்கும் பிளாஸ்டிக் கப் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்குகிறது. அதில் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகின்றன. குப்பையைக் கண்ட இடங்களில் போடாமல், குப்பை சேகரிக்க வரும் ஊழியர்களிடம் கொடுக்க வேண்டும் என்று சொல்லிவருகிறோம். காலிமனை உள்ளவர்களிடம், வேலி அமைத்துப் பாதுகாக்க வலியுறுத்திவருகிறோம். அதிக கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் இருந்தால் அபராதம் விதிக்கிறோம்.” என்றார்.

ஊரப்பாக்கம் பகுதியில் மட்டும் சுமார் 20 பேருக்கு ஒரே நாளில் 3.17 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் பொன்னையா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!