Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"கொசு உற்பத்திக்கு வழிவகை செய்பவர்களுக்கு அபராதம்!" கரூர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

Karur: 

"தொழிற்சாலைகள், காலி வீட்டு மனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைச் சுத்தமாகவைக்காமல் கொசு உற்பத்திக்கு வழிவகை செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்" என்று கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் எச்சரித்துள்ளார்.

கரூர் மாவட்டம் ராயனூர் அன்புநகர், காந்தி கிராமம், மூலகாட்டனூர், பசுபதிபாளையம் ஏ.வி.பி. நகர் ஆகிய பகுதிகளில், டெங்கு தடுப்புப் பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகள் நடைபெற்றுவருவதை, கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் இன்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், சமூக பாதுகாப்புத் திட்ட துணை ஆட்சியர் ஜான்சிராணி, நகராட்சி ஆணையர் அசோக்குமார், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் நளினி, மாவட்ட பிற்பட்டோர் நல அலுவலர் சாந்தி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ், "டெங்கு தடுப்புப் பணிகளுக்காக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பணியாளர்கள், பொது சுகாதாரப் பணியாளர்கள், பூச்சியியல் வல்லுநர், ஒப்பந்தப் பணியாளர்கள் தொடர்ந்து பணிபுரிந்துவருகிறார்கள். மேலும், ஊர்க்காவல் படை, சாரண சாரணியர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் வட்டார மருத்துவர்கள் என 3,450 நபர்கள் மூலம் பணிகள் நடைபெற்றுவருவதுடன், பொதுமக்களுக்கு விழிப்புஉணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இவர்களின் பணிகளைக் கண்காணித்திட மாவட்ட அளவிலான அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், கிராமங்கள்தோறும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருவதுடன், நிலவேம்புக் குடிநீரும் வழங்கப்பட்டுவருகிறது. இப்பணி,  ஓர் இயக்கம் போல செயல்பட்டுவருகிறது. 

பொது இடத்தை மாசுப்படுத்துபவர்கள், தொழிற்சாலைகள், காலி வீட்டு மனைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைச் சுத்தமாக வைக்காமலும், தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்காமலும் கொசு உற்பத்திக்கு வழிவகைசெய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. டெங்கு தடுப்புப் பணிகள் மேற்கொள்ள ஏதுவாக உரிய பயிற்சி வழங்கப்பட்டது. இதுவரை வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்தின்மூலம் ரூ 40 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், தொழில் முனைவோர் சமுதாய அக்கறையோடு செயல்பட வேண்டும்" என்றார்.

அதற்கு முன்னதாக, மாவட்டத்தில் உள்ள ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர்கள் சிறப்பாகப் பணிபுரிய, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆலோசனை வழங்கினார். மேலும், 'வீடு வீடாகச் சென்று டெங்கு தொடர்பாக விழிப்பு உணர்வு ஏற்படுத்துவோம்' என்று மாவட்ட ஆட்சித்தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close