திருச்சி விமான நிலைய புதிய முனையத்திற்கான பணிகள் மார்ச் மாதம் துவங்கும்! - விமான நிலைய இயக்குநர் தகவல்

'விமான நிலைய புதிய முனையத்திற்கான பணிகள், மார்ச் மாதம் துவங்கும்'  என்று திருச்சி விமான நிலைய இயக்குநர் குணசேகரன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில், புதிய முனையத்திற்கான பணிகள் மார்ச் மாதம் துவங்கும், கட்டட வரைபடத்துக்கு, விமான நிலைய ஆணையக் குழுமம் கொள்கைரீதியாக ஒப்புதல் அளித்துள்ளது என  திருச்சி விமான நிலைய இயக்குநர் குணசேகரன்  கூறியுள்ளார்.

 திருச்சி விமான நிலைய இயக்குநர் குணசேகரன்

பத்திரிகையாளர்களைச் சந்தித்த திருச்சி விமான நிலைய இயக்குநர் குணசேகரன்,

“திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இதுகுறித்து பொதுமக்களிடம்  கருத்து கேட்கப்பட்டு வருகிறது. அடுத்து, நிலத்துக்கான உரிய இழப்பீடு வழங்கப்பட்டு, விமான நிலைய ஓடுதள விரிவாக்கத்துக்கான நிலம் கையகப்படுத்தும் பணி  நடைபெறும். அந்தப் பணி  3 மாதத்தில் துவக்கப்படும் .

மேலும், சுங்கத்துறையினர் பயணிகளிடம் லஞ்சம் வாங்குவதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது.  இதுகுறித்து விமான நிலைய லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர் என்றவர், புதிய விமான சேவைகுறித்து சர்வதேச அளவில் நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடைபெறுகிறது. திருச்சி, கொரியர் கார்கோ சேவையும் இன்னும் மூன்று  மாதத்தில் துவங்கும்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!