வெளியிடப்பட்ட நேரம்: 16:35 (23/10/2017)

கடைசி தொடர்பு:16:35 (23/10/2017)

ஶ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்கான பந்தல்கால் ஊன்றும் விழா

ஸ்ரீரங்கம்

 வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் விரதமிருந்தால் `மூன்று கோடி ஏகாதசிகள்' அன்று விரதமிருந்த நற்பலன்களை ஒரே நாள் பெறலாம் என்பது ஐதிகம். வைணவ மரபின் தலைநகரம் என்று போற்றப்படும் ஶ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மேலும், அன்று அதிகாலை திறக்கப்படும் வைகுந்த வாசல் திறப்பு விழாவுக்கு பக்தர்கள் திரண்டு, அரங்கனையும் தரிசித்து மகிழ்வார்கள். இந்தவருடம், திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதசுவாமி திருக்கோயிலில் வரும் 18 .12 .2017 முதல் 8.1. 2018 வரை வைகுண்ட ஏகாதசி பெருவிழா நடைபெற உள்ளது. மேலும், இதன் முக்கிய திருவிழாவான பரமபத வாசல்திறப்பு வரும்  29 .12 .2017 அன்று காலை நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை ஸ்ரீரங்கம் அருள்மிகு ரெங்கநாதசுவாமி திருக்கோயில் ஆயிரம்கால் மண்டபம் அருகே பந்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் அறங்காவலர்கள்,கோயில் பணியாளர்கள், பக்தர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். 

  

நீங்க எப்படி பீல் பண்றீங்க